#BREAKING : தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பின் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்தார் .தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜகவின் தலைவராக இருந்தார் தமிழிசை.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார் முருகன்.