ஒரே நாளில் காலியான நம்பர் ஒன் இடம்…ரூ.56,000 கோடி சொத்துக்கள்!

Default Image

இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களில் முதலிடம் வகிக்கும் அம்பானியின், பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் ஆனது ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு பெருத்த நஷ்டம் அடைந்துள்ளது.

நம்பர் ஒன் பணக்காராக வலம் வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சவுதி அராம்கோ பல பில்லியன் டாலர்களுக்கு விரைவில் வாங்க உள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சவுதி அராம்கோ நிறுவனமானது இதுவரையில் இல்லாத அளவிற்கு ஏன்? வரலாறு காணாத அளவில் 320 பில்லியன் டாலர்களை இழந்து உள்ளது.

Image result for ecomomy down

நேற்று கச்சா எண்ணெய் உற்பத்தியானது அதிகரித்து அதன் விலையை 20% வரையில் குறைத்து வெளியிட சவுதி அரேபியா முடிவு செய்தது . இதன் காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகளில் ஒரே நாளில் 9.4 % கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த 2 நாட்களில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 320 பில்லியன் டாலர் குறைந்து அதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அடியோடு  இழந்துள்ளது. இதன் மூலமாக, 2 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட சவுதி அராம்கோ தற்போது வெறும் 1.4 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.

Image result for mukesh ambani

அராம்கோ நிறுவனத்திற்கு அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய கெமிக்கல் வர்த்தக பிரிவின் 20% பங்குகளை விற்பனை செய்ய ஒப்புகொண்ட நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலைகள், கடந்த 20 டிசம்பர் 2019-ல் உச்ச விலையாக, 1,617 ரூபாயைத் தொட்டது.தற்போது ரிலையன்ஸின் பங்கு விலை 1,104ல் ரூபாயாக குறைந்து சமீபத்திய வர்த்தகம் நிறைவடைந்தது.

Image result for ecomomy down

இதனால் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் பெரிய நிறுவனமாக இருந்து வந்தாலும், 2.88 லட்சம் கோடி ரூபாய் கடனில் அது இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இவைகளை சமாளிக்க முகேஷ்  புதிய வர்த்தகங்களில், அதாவது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடைல் உள்ளிட்டவைகள் மூலம் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Image result for ambani economy aram ko

மார்ச்.,9ந்தேதி  ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ்  வர்த்தகம் சடும் சரிவை சந்ததில், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையுமே கதி கலங்க வைத்து விட்டது.மேலும் இந்த சரிவால் அம்பானியின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர் அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின்படி, 50 பில்லியன் டாலாராக இருந்து வந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 42.2 பில்லியன் டாலாராகி உள்ளது.7.8 பில்லியன் அதாவது அம்பானியின் சொத்து மதிப்பில் 56,000 கோடி ரூபாய்  காணாமல் போயுள்ளது மேலும் ஆசியாவிலே நம்பர் ஒன் பணக்காரர் என்ற பட்டியலில் இருந்து வந்த அம்பாணி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பங்குகளின் சரிவால் கடும் அப்செட்டில் உள்ளாராம் அம்பாணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்