#Breaking : காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் .முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அவரது கடிதத்தில் ,கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்தேன். தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது.இனிமேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் எதுவும் செய்ய முடியாது என நம்புகிறேன்.என்னுடைய மக்களுக்காக, இந்த புது தொடக்கத்தை துவக்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.