#Breaking: காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் – சோனியா காந்தி ஆலோசனை.!
மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலங்கியுள்ளார். பின்னர் அவரது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.