டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு – தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி. சி.பி.ஐ. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.