கொரோனா வைரஸ் பிறப்பிடத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் பயணம்..!
கொரோனா வைரஸ் உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது. சுமார் 90 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் நாள்தோறும் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் முதல் முறையாக சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் அங்கு உள்ள இறைச்சி மார்க்கெட்டில் இருந்து கண்டறியப்பட்டது.இதுவரை சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3,136 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 80,753 மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் பிறப்பிடமான உகான் மாகாணத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. உகானில் கொரோனா வைரஸ் பரவிய பின்பு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.