1008 சங்காபிஷேகம்…அரோகரா கோஷத்தில் அதிர்ந்தது பழனி!

Default Image

மாசி மகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் வெகுச்சிறப்பாக பாரவேல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை எல்லாம் 1008 சங்குகளில் வைத்து உலக நலன் மற்றும் அமைதி, விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து  யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப் பட்டதுடன் .தொடர்ந்து மூலவருக்கு 16 வகையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.திரளான  பக்தர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷங்களால் கோவிலே அதிர்ந்தது இந்நிகழ்ச்சிளை எல்லாம் பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்