இயக்குனராக களமிறங்கிய விஜய் பட நாயகி.! டீசரை வெளியிட்ட கௌதம் மேனன்.!

Default Image

தளபதி விஜயின் கண்ணுக்குள் நிலவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை காவேரி. இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட பல மொழிகளில் நிறைய  படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்கும் காதல் உளவியல் த்ரில்லர் கதைக்களத்தில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் காவேரி. நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் இப்படத்தினை காவேரியின் கே 2 கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. 

மேலும் இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கல்யாணி என்றும் அழைக்கப்படும் நடிகை காவேரி, தமிழில் சமுத்திரம், காசி மற்றும் புன்னகைப் பூவே ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்