பிரியங்கா காந்தி கண்டனம்… பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்களை பேனர் வைத்து அவமானப்படுத்துவதா..?
உத்தரபிரதேசத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இழப்பீடு கேட்டு அவர்களின் புகைப்படத்தை லக்னோ நகரில் சில முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அதன்படி தற்போது பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இழப்பீடு கொடுக்க தவறினால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.