இரண்டாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை.. பதற்றத்தில் ஜப்பான்,தென்கொரியா…

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர். சீனாவிற்கு அடுத்ததாக ஜப்பான் ,தென்கொரியாவை தான் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கி உள்ளது. இந்நிலையில் வடகொரியா ஒரு வார இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் இடத்திலிருந்து 3 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டது. இதனை உறுதி செய்துள்ள தென்கொரிய ராணுவம் ஏவுகணை சோதனை செய்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
அண்டை நாடான ஜப்பான் , தென்கொரியா ஏவுகணை சோதனை செய்ததால் பதற்றத்தில் உள்ளனர். அணு ஆயுத சோதனைகளை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் இரண்டு முறை நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமாறு அமெரிக்க கோரிக்கை விடுத்தது. வடகொரியா கோரிக்கையை ஏற்காவிட்டால் பொருளாதார தடையை நீக்கமாட்டோம் என டிரம்ப் கூறி வி்ட்டார். ஆனாலும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை செய்து வருகிறது.
இதற்கு முன் கடந்த வாரம் சிறிய தொலைவில் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனைசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.