மருத்துவமனையில் லிப்ட் விபத்து..எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் உயிர் தப்பினர்..
சென்னை திருவல்லிக்கேணி உள்ள தனியார் மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த அயன் என்ற எட்டு மாத குழந்தைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அந்த குழந்தையை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் மூன்றாவது மாடிக்கு செல்ல லிப்ட் மூலமாக குழந்தையுடன் உறவினர்கள் சென்று உள்ளனர். இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது.
இந்த லிப்டில் பயணம் செய்த எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் உயிர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து தொடர்பாக ஐஸ் அவுஸ் காவல்நிலைய ஆய்வாளர் திரு கருணாகரன் விசாரணை செய்ததில் லிப்ட் இயக்குவதற்கு ஊழியர் இல்லாததாலும், அதிகமான நபர்கள் லிப்டில் சென்றதுதான் விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்தது.