#Breaking: தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம் செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை மார்ச் 31 வரை பயோமெட்ரிக்கில் பதிவு செய்ய தேவையில்லை என கூறியுள்ளது. கடந்த வாரத்தில் மத்திய மேம்பட்டு ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்குள்ள அலுவலகங்கள் போன்றவைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக மாணவர்களின் வருகை பதிவேடு மூலமாக கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதையடுத்து மார்ச் 31 வரை பயன்படுத்தக்கூடாது என்றும் அதன்பின் இந்த முறையை நீடிப்பதா அல்லது தொடர்வதா என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனிடையே டெல்லி மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனம் உள்ளிட்டவைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது