மகுடம் சூட்டிய டைம்..முதல்பக்கத்தில் இடம்பெற்ற கிரேட்டா..மிகச்சிறந்த பெண்மணி
பருவநிலை மாற்றம் குறித்து இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் கடந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த பெண் என்று டைம் பத்திரிக்கை புகழாரம் சூட்டி ககௌரவித்துள்ளது.
பிரபல பத்திரிகையான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தங்களது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று பெரும் தலைவர்களின் மிகப்பெரிய விருப்பமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அப் பத்திரிக்கை நிறுவனம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாணவி கிரேட்டா துன்பர்க்கின் புகைப்படதுடன் வெளியிட்டுள்ளது.உலகத்தில் மாறி பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐநா சபையில் கிரேட்டா அரசியல்வாதிகளை நோக்கி, உங்களுக்கு என்ன தைரியம் என்றே முதலில் தன் பேச்சைத் தொடங்கினார். இவருடைய இந்த கேள்வியால் உலகப் புகழ் பெற்றார்.
இளம் வயதில் உலகம் குறித்த பார்வை சமூக செயற்பாட்டாளர்,அசத்திய அஞ்சமின்மை ஆகியவற்றால் கடந்த ஆண்டுக்கான சிறந்த பெண்மணி என்ற பெயரை கிரேட்டா தன்வசப்படுத்தியுள்ளார். அதே போல் டைம் பத்திரிகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டைப் படத்தில் இடம்பெற்ற ஒரே இந்தியப் பெண் முன்னாள் பிரதமர் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.