வர்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளை பரிமாறி சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஹோலி.!
இந்திய மக்கள் விரும்புகின்ற பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. வண்ணங்களின் பண்டிகையான ஹோலி, வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் பரவலாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தில் வர்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளை பரிமாறி சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது. ஹோலி அல்லது அரங்க பஞ்சமி என அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனி கால பண்டிகை.
ஹோலி பண்டிகை தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாத பெளர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. துலன்னி என அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையும், வண்ணங்கள் கலந்து பொடிகளை கலந்து தெளித்து விளையாடி மகிழ்வது வழக்கம். அந்த நாளுக்கு முன்னதாக பெரிதாக நெருப்பு மூட்டி கொண்டாடுவார்கள். அதற்கு சோட்டி ஹோலி அல்லது ஹோலிகா தகனம் என அழைக்கப்படும்.