கொரோனா வைரஸ் ! வதந்திகளை நம்ப வேண்டாம்- அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் . சுகாதாரத்துறை தகவல்களை தவிர வேறு எதையும் மக்கள் நம்ப வேண்டாம் .
மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்பது அவசியம் இல்லை .வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.கொரோனா வைரஸை தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.