சமமானவள் என்று உலகம் உணரட்டும் -கனிமொழி மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும். #HappyWomensDay2020 pic.twitter.com/8bYEfvdW57
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 8, 2020
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும். பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம் என்று பதிவிட்டுள்ளார்.