எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை, எனது அப்பாவுக்கு எப்படி வாங்குவேன் – தெலுங்கானா முதல்வர்
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சட்டங்கள் தொடர்பான கவலைகளுக்கு பதிலளித்த தெலுங்கானா முதல்வர், எனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது, எனது தந்தையின் சான்றிதழை நான் எவ்வாறு தயாரிக்க முடியும் என கூறினார்.
இந்த திட்டம் என்னையும் கவலையடையச் செய்கிறது. நான் கிராமத்தில் எனது வீட்டில் பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை என்றும் கிராமத்து பெரியவர் ஒரு ‘ஜன்ம நாமா’ எழுதுவார். அது அதிகாரப்பூர்வ முத்திரையை ஏதும் எடுக்கவில்லை என்று 66 வயதான தெலுங்கானா முதல்வர் தெரிவித்தார். பின்னர் எனது பிறப்புச் சான்றிதழை என்னால் தயாரிக்க முடியாதபோது, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் எவ்வாறு தங்கள் சான்றிதழ்களைத் தயாரிப்பார்கள் என்று அவர் கேட்டார்.
மேலும் குழந்தைகளின் ஜாதகங்களை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார். அது பிறப்புச் சான்றிதழாக கருதப்படுகிறது. அதில் அதிகாரப்பூர்வ முத்திரை எதுவும் இல்லை. இன்றும் கூட, எனது பிறப்பு நட்சத்திர ஆவணம் என்னிடம் உள்ளது என்றும் இதை தவிர வேறு ஏதும் என்னிடம் இல்லாதபோது என் தந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வரும்படி கேட்டால், நான் இறக்க வேண்டுமா? என்று கேட்டார். தனது கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) சில உறுதியான கடமைகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது என்றும் கட்சி ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் வலியுறுத்தினார்.