அசத்தலாக மகளிரை கவுரவித்துள்ள கூகுள் நிறுவனம்.!

Default Image

ஆணாதிக்கம் சமுதாயத்தில் தனக்கென உரிமையை பெற்றேடுத்து, பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகமெங்கும் உள்ள மகளிரை தனது டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கவுரவித்து உள்ளது. அதாவது அனிமேஷன் மூலம் பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்மணிகளின் சமூதாய பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் 3 அடுக்கு 3டி பேப்பர்களை உருவாக்கி டூடுள் வீடியோ வெளியிட்டுள்ளது. 

இந்த வீடியோவில் மையத்தில் உள்ள அடுக்கு 1800களில் இருந்து 1930 வரை தொழிலாளர் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது. 2வது அடுக்கு 1950 முதல் 1980களில் பாலின சமத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது. மேலும் கடைசி அடுக்கு 1990களில் இருந்து இன்று வரை பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்