#BREAKING : கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி ! இந்தியாவில் மொத்தம் 39 பேருக்கு பாதிப்பு
கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.மேலும் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பத்தினம்திட்டா பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.