அறிமுகமானது அப்டேட் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடல்… முன்பதிவு தொடங்கியது….
கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடல் தற்போது முதல் முறையாக அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் இந்த புதிய காரில் பி.எஸ். 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடலில் முன்புறம்
- மேம்பட்ட பம்ப்பர்,
- ஃபாக் லேம்ப் ஹவுசிங்,
- சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு பார்க்க ஹனிகொம்ப் மெஷ் போன்று காட்சியளிக்கிறது.
- இதன் ஹெட்லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும்,
- புதிதாக எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
- இத்துடன் டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன.
- எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
- இத்துடன் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய அலாய் வீல்களும் வழங்கப்படலாம்.
- ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.
- புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.