மக்கள் மகிழ்வுடன் வண்ணப்பொடி தூவி வண்ணமயமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை…

Default Image

இந்தியாவில் அனைத்து மக்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று  ஹோலி பண்டிகைய்யாகும். இந்த பண்டிகை  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் அனைவரிடமும் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதை  முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலக மற்றும் உயிர் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை இந்நாளில் மகிழ்சிய்யாக  வரவேற்பார்கள்.

அவர்கள் தங்களது நண்பர்களின் முகங்களில் வண்னப்பொடியை  பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு வகை இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியடைவார்கள். வடஇந்தியாவில் அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரித்து, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், நரசிம்ம அவதார பக்தன் பக்த  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள்.பின்,  மக்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்