வரலாற்றில் இன்று(08.03.2020)… சர்வதேச உழைக்கும் மகளீர் தினம் இன்று…

Default Image

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச உழைக்கும் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டத்தில் தொடங்கியது இல்லை அது போராட்டத்தில் தான் தொடங்கியது என்றால் நம்பமுடிகிறதா?.. இது குறித்த சிறப்பு தொகுப்பு…

பெண்கள் தினம் உருவான வரலாறு: 

வேலை நேரத்தை குறைக்கவும் கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் ர்ஹதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்கா சோசலிஸ்ட் கட்சி. இந்த நாளை சர்வதேச மகளீர் தினமாக அணுசரிக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தவர் கிளாரா ஜெட்கின். இதை இவர் கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த்ச் யோசனை யை முன் வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளை சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டார். இதனையடுத்து  1911 ஆம் ஆண்டு ஆஸ்த்திரியா ,டென்மர்க ,ஜெர்மனி, ஸ்விச்சர்லாந்து, ஆகிய நாடுகளில் உழைக்கும் பெண்கள்  தினம் கொண்டாடப்பட்டது.  எனவே இந்த வகையில் , இந்தாண்டு நடைபெறும் பெண்கள் தினம் 110வது பெண்கள் தினம் ஆகும். எனினும் ஐக்கிய நாடுகள் சபையானது 1975ல் தான் சர்வதேச பெண்கள் தினத்தை முறைப்படி அறிவித்தது. அத்துடன் அந்த ஆண்டு ஒரு கருப்பொருளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு சர்வதேச மகளீர் தின கருப்பொருளானது, 

சமத்துவத்தை யோசி

அறிவுப்பூர்வமாக கட்டியெழுப்பு

மாற்றத்திற்காக புதுமையை சிந்தி ஆகியவை ஆகும்.

மகளீர் தினமான இன்று அனைவரும் மகளீருக்கு தகுந்த மதிப்பளித்து அவர்கள் சிறந்த நிலையை அடைய அனைவரும் பாடுபடவேண்டும். தினச்சுவடின் அனைவருக்கும் இனிய பெண்கள் தின நழ்வாழ்த்துக்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்