ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்… கங்குலி ..!
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் டி20 தொடர் நடைபெறாது என தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் பிசிசிஐ தலைவர் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த ஐபிஎல் டி20 தொடர் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு கங்குலி ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறு என கூறினார்.
உலகம் முழுவதும் பல்வேறு தொடர்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்து விளையாட உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. கொரோனா அச்சுறுத்தலை கையாள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கங்குலி கூறினார்.