மறைந்த திமுக பொதுச்செயளாலர் க. அன்பழகன் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது… கீழ்பாக்கத்தில் அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது…
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சென்னை அப்போலோ மருத்துவமனையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1.17 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகள் , மூத்த தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் இன்று மாலை சரியாக 4.45 மணிக்கு கீழ்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் அவரது பூத உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் திமுக பொதுச்செயளாலர் க. அன்பழகனின் மறைவால் திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் திமுக கொடிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயளாலர் க. அன்பழகனின் மறைவு திமுக உடன் பிறப்புகளிடையே அதிர்ச்சியை ஏர்படுத்திய்யுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)