அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 20 பேர் காயம்..!
பிரான்ஸ் நாட்டில் அதிவிரைவு ரயில் ஓன்று ஸ்ட்ராஸ்போர்க் நகரில் இருந்து தலைநகர் பாரீஸுக்கு 348 பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது.அப்போது பாஸ்- ரின் பகுதியிலுள்ள இன்கன்ஹேம் அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தபோது தண்டவாளத்தில் இருந்து விலகியது.
இந்த விபத்தில் ரயில் என்ஜின் டிரைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த என்ஜின் டிரைவரை ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்கு பாரீஸ் கொண்டு சென்றனர்.இந்த விபத்துக்கு காரணம் தண்டவாளம் இருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளமே என கூறப்படுகிறது.