கொரோனா வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் ராம்கோபால் வர்மா! ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பதிவு!
திரையுலகைப் பொறுத்தவரையில் கடந்த சில காலங்களாகவே பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வருகிறது. இதில் நடிகை ஸ்ரீரெட்டி பலர் மீது பாலியல் குற்றங்கள் சாட்டி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை விமர்சித்துள்ளார். அதில் கொரோனா வைரசை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார் ராம்கோபால் வர்மா. எனினும் நான் அவரை நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் மற்றும் அது குறித்த தகவல்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.