சீனாவை அடுத்து தென் கொரியாவை மிரட்டும் கொரோனா.! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் சீனாவை மிரட்டி வருகிறது. உலக முழுவதும் இந்த வைரசால் இதுவரை 3,272 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலும் சீனாவை சேர்த்தவர்கள். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,900-ஐ எட்டியுள்ளது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் சீனாவை சேர்த்தவர்கள் என தகவல்.
இந்த வைரஸ் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் பரவி வருகிறது. அங்கு வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தென் கொரியாவில் மேலும் புதிதாக 518 பேர் கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6284 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 37 லிருந்து 42 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.