சசிகலாவை விட்டு அரசியல் செய்வது கஷ்டம் – பாஜக மூத்த தலைவர் கருத்து.!

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம், ஆனால் அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினார். சிஏஏவினால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் இது யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். பின்னர் பாஜக தனியாக நின்று வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான முயற்சி எதும் செய்யவில்லை. மேலும் சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்றும் சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.