சிஏஏ விவகார போராட்டம் ..! கைது செய்யும் உத்தரவு நிறுத்திவைப்பு!
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் பல போராட்டங்கள்நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க என வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர்.மேலும் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுவதாகவும் கூறி இருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துபவர்களை கைது செய்து அப்புறப்படுத்துங்கள் என நேற்று திருப்பூர் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யலாம் என்று நேற்று உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.