கர்நாடகாவில் விபத்து ..! தமிழகத்தை சார்ந்த 10 பக்தர்கள் பலி..!
ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.