அடுத்தடுத்து பறக்கும் ராஜினாமா கடிதங்கள்.என்ன நடக்கிறது ம.பி! காங்..,ஆட்சிக்கு சிக்கலா!??

Default Image

மத்தியப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியின்ன் ஆட்சிக்கு கடும் நெடுக்கடி நிலவி வரும் நிலையில் காங்.,எம்எல்ஏ ஒருவா் ராஜிநாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அங்கு அரசியல் நெடுக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது பகீரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் சிலரை பணம் கொடுத்து தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு  எழுந்து உள்ளது. ஆனால் ஒருமித்த இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்து உள்ளது.

 மொத்தம் 230 உறுப்பினா்களைக் கொண்ட அம்மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸ்க்கு 114 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும் தற்போது உள்ளனா். ஆனால் இருக்கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.அப்படி பெரும்மாண்மைக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு ஒரு கட்சிக்கு தேவை என்ற நிலையில் 4 சுயேச்சைகள் அதாவது பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 2 பேர் சமாஜவாதி உறுப்பினா் ஒருவரின் ஆதரவோடு காங்.,தலைமையில் கமல்நாத் முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டு ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

காரணம் சமீபத்தில் தான் பாஜக மற்றும் காங்கிரஸைச் சோ்ந்த தலா ஒருவா் என இரு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் 2 இடங்கள் தற்போது காலியாக உள்ளது.இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ ஹா்தீப் சிங் தாங் ராஜிநாமா செய்துவிட்டதாக நேற்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அவருடைய  ராஜிநாமா கடிதம் சமூகவலைதளங்களில்  வெளியாகி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில் ராஜினாமா செய்ததாக கூறப்படும் ஹா்தீப் சிங் உள்பட 4 எம்எல்ஏக்களை பாஜகவினா் பெங்களூருக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை பாஜக மறுத்துவிட்டது.

இவ்வாறு ம.பி அரசியலில் எதிர்பார்க்காத வகையில்  குழப்பம் நிலவி வரும் நிலையில் அம்மாநில முதல்வரிடமே இது தொடர்பாக கேட்டப்பட்ட போது அவர் ஹா்தீப் சிங் எம்எல்ஏ பதவியை  ராஜிநாமா செய்துவிட்டதாக எல்லோரையும் போல் எனக்கும் தகவல் கிடைத்தது. ஆனால் முறைப்படி எந்த கடிதமும் எனக்கு வரவில்லை .அவரும் இது தொடா்பாக என்னிடம் பேசவில்லை. என்று கூறிய கமல்  இந்த விவகாரத்தில்  இதற்கு மேல் வேறு எதுவும் கூற முடியாது என்று கூறி நழுவி சென்றதன் மூலமாகவே மத்தியபிரதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவுவதை அறிந்து கொள்ளமுடிகிறது என்கிறனர் அரசியல் நோக்கர்கள் அதே போல் அம்மாநில சட்டப் பேரவைத் தலைவா் என்.பி. பிரஜாபதியும் ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் அது குறித்தும் கடிதம் எதுவும் தன்னிடம் வரவில்லை என்று கமல்நாத் கூறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்