5-வது முறையாக நிரவ் மோடி ஜாமீன் மனுவை நிராகத்த லண்டன் நீதிமன்றம்..!
தொழிலதிபர் நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று திருப்பி தராமல் லண்டன் ஓடிவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில்அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நிரவ் மோடி பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில் நிரவ் மோடி சார்பில் நேற்று முன்தினம் மீண்டும் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதி நிரவ் மோடி ஜாமீன் மனுவை ஐந்தாவது முறையாக நிராகரித்தது.