அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!அமெரிக்காவில் கார்களுக்கு இனி வரி ?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கான வரி விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கைகோர்த்துக் கொண்டு வர்த்தகத்தில் அமெரிக்காவை வீழ்த்த துரோகம் இழைப்பதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க கம்பெனிகளுக்கு வரி அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய டிரம்ப், இதை மேலும் அதிகரித்தால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையைக் கொண்டு வரப் போவதாக எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.