பரபரப்பு..! “முதலமைச்சரை வீடு புகுந்து வெட்டுவோம்” என மிரட்டல் கடிதம் ..!
கேரளா மாநிலத்தில் தற்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளா முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.இவர் சமீபத்தில் கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தார்.
மேலும் இந்த சட்டத்தை கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது சில வன்முறைகள் நடந்தது. இதனால் போராட்டத்தை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்கிறது. அவர்களை களையெடுக்க அரசு தயங்காது எனவும் எச்சரித்தார்.
இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ரஹீமுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் “பினராயி விஜயனையும், ரஹீமையும் வீடு புகுந்து வெட்டுவோம்” என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.