ரூ. 400 கோடி செலவில் தலைமைச்செயலகம் பட்ஜெட்டில் அறிவிப்பு..!
கர்நாடக அரசு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 5-ம் தேதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.அதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டிடத்தில் செயல்பட விதமாக 25 மாடிகளைக் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடத்தை ரூ .400 கோடி செலவில் கட்டப்படும் என அறிவித்தார்.
மேலும் பட்ஜெட் தடைகளை சமாளிக்கும் விதமாக எரிபொருள் மீதான வரியை அதிகரித்துள்ளார். இதனால் பெட்ரோல் விலை ரூ .1.60 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.