2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சர் எடியூரப்பா..!
கர்நாடக அரசு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 5-ம் தேதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.அதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.
நேற்று சட்டசபையில் அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தநிலையில் முதலமைச்சர் எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்தார்.