கோவையில் கெட்டுப்போன நிலையில் 500 கிலோ மீன்கள் பறிமுதல்..!
கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் கெட்டுப்போன 500 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் 70 கிலோ மீன்கள் பார்மலின் தடவிய மீன்கள், 430 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை அதிகாரிகள் அங்கே அழித்தனர்.
கடந்த 01-ம் தேதி மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அந்த சோதனையில் 53 மீன் கடைகளில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டு ரசாயனம் கலந்த 2 டன் மீன்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.