புதுச்சேரி தேர்தல் ஆணையர் நியமனம் -ஆளுநர் உத்தரவு செல்லும்
மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த ஆண்டு புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.இதற்குஇடையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாநில தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார் .மேலும் மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று தேர்வு செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ,ஆளுநர் உத்தரவு செல்லும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.