சர்வதேச அளவிலான சரித்திர நிகழ்வு.! முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு.!

Default Image

சர்வதேச மகளிர் தினம் வரும் 8ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிரை கௌரவிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட முழு அமர்வு ஒரு வழக்கை நேற்று விசாரித்தது. இந்த அமர்வில், தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டமானது தனியார் கல்வி நிலைய ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது குறித்து முடிவு செய்ய 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமைத்து உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்குகளை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். இந்த முழு அமர்வில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளும் பெண் நீதிபதிகள் என்பதால், இந்திய நீதித்துறையில் இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மகளிர் தினம் நெருங்கும் நேரத்தில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்தது சர்வதேச அளவிலான சரித்திர நிகழ்வாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்