காட்டடி அடித்து ஃபார்மில் இருப்பதை நிரூபித்த ஹர்திக் பாண்டியா..!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு, உலக கோப்பைக்கு பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதுகில் காயம் ஏற்பட்டது.
இதன் பின் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்த இவர், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டு, முழு உடற்தகுதியை பெறாத காரணத்தால் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் டிஒய் பாட்டில் டி20 தொடரில் சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா களம் இறங்கிய முதலே பவுண்டரியும் , சிக்ஸருமாக விளாசினார். இதனால் 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.
இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த காட்டடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.