அமெரிக்காவில் பனிப்புயல் !!!
அமெரிக்கா: பனிப்புயலில் சிக்கி 5 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள கிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் தாக்கத்தினால் 5ற்கும் மேற்ப்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிபுயல் வீசி வருகிறது. இந்நிலையில், கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூசெட்ஸ் உள்ளிட்ட நகரங்களில் நேற்று பனிப்புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
இந்த பனிப்புயல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசியதால், பனியின் தாக்கம் அதிகரித்ததோடு, நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் சரிந்தன. கடலோர பகுதிகளில் வசிப்போர்களின் வீட்டில், கடல் அலைகள் புகுந்தன.
அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களில், பாதுகாப்பு கருதி ரயில் சேவை, மினசாரம் சேவைகளை் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பனிப்புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியானதாகவும், மேலும் பல பேர் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு