சுவையான காய்கறி ரசம் செய்வது எப்படி?

நமது வீடுகளில் அதிகமாக சமையல்களில் ரசம் வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், சுவையான காய்கறி ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கேரட் ஒன்று
- பீன்ஸ் 2
- துவரம்பருப்பு அரை கப்
- ரசப்பொடி தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- சின்ன வெங்காயம் 4
- தக்காளி ஒன்று
- புளி நெல்லிக்காய் அளவு
- கடுகு எண்ணெய் தாளிக்க
- தேங்காயெண்ணெய் கரண்டி
செய்முறை
முதலில் துவரம்பருப்பை அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பருப்புடன் அனைத்து காய்களையும் போட்டு நன்கு குக்கரில் வேக வைத்து ஆற வைத்து, மிக்ஸியில் இரண்டு சுற்று விட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். அதில் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி விட வேண்டும்.
நன்கு கொதிக்கும்போது புளியைக் கரைத்து ஊற்றி பெருங்காயம், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு இறக்குவதற்கு முன் துருவிய தேங்காயை சேர்த்து இறக்கினால் சுவையான காய்கறி ரசம் ரெடி. இறுதியில் பரிமாறும்போது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவேண்டும்.