புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சிக்கு ரூ.382 கோடியும், அரியலூருக்கு ரூ.347 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து. மத்திய அரசு இந்தியா முழுவதும் 2020-21-ம் ஆண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசு சார்பாக அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் உள்ளிட்ட 11 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.