13 ஆவின் இயக்குனர்களில் 11 பேரின் தேர்விற்கு தடை விதித்தஉயர்நீதிமன்ற கிளை .!
மதுரை ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை 17 இயக்குனர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த 17 இயக்குனர்களின் தேர்வு தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் 13 பேரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் இயக்குனரகம் கடந்த 01-ம் தேதி அறிவித்தது .இந்த போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தாக கூறி மதுரையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மதுரை உயர்நீதிமன்றகிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த தேர்வை தடை செய்து நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் மறு தேர்தல் நடக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கலில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்தது.அதில் ஆவின் 13 ஆவின் இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை நீதிபதிகள் முழுமையாக பார்வையிட்டனர். இதில் திருப்தி அடையாத நீதிபதிகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 13 நபர்களில் 11 இயக்குனர்களின் தேர்வை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மற்றும் நாளை நடைபெறும் தேர்வுக்கு ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.