என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் – அம்மாநில அரசு முடிவு.!
மத்திய அரசால் அண்மையில் கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனை சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றம் செய்துள்ளனர். சிலர் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது எனவும் என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.