வரலாற்றில் இன்றுதான் செருப்பு தைப்பவரின் மகன் அமரிக்காவின் அதிபரானார்…!!
வரலாற்றில் இன்று – மார்ச் 4, 1861 – அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார்.
அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன.
‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர்.
அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின.
அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று சில மாநிலங்களைச் சேர்ந்த பிற்போக்கு தலைவர்கள் முடிவெடுத்தனர். அதற்கு ஆதரவான பிரச்சாரங்களைப் பரப்பி மக்களிடையே கலவரங்களை மூட்டினர். உள்நாட்டு போர்மூண்டது.
லிங்கன் உள்நாட்டுப் போரை முறியடித்து அதில் வெற்றி கண்டார். நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார்.
‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார்.