கன மழை எதிரொலி !இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து ..7 மாவட்டத்தில் விடுமுறை !
நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக கீழ் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் கூறியுள்ளார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி ஆணையர் பழனிசாமி கூறியுள்ளார்.