சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள் பிரதமரே- ராகுல் காந்தி ஆவேசம்
இந்தியாவின் நேரத்தை சமூக வலைத்தளங்களில் வீணடிக்காதீர்கள் பிரதமரே என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான திட்டங்கள் பற்றி பிரதமர் யோசிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார் .மேலும் கொரோனா பாதிப்பு பற்றி சிங்கப்பூர் பிரதமர் எடுத்துவரும் திட்டம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார் ராகுல் காந்தி.