உலக கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மூன்று பதக்கம்; பட்டியலில் முதல் இடம்….!!

Default Image

உலக துப்பாக்கி சூடுதல் விளையாட்டு கழகத்தின் (International Shooting Sport Federation) சார்பாக உலக கோப்பை போட்டியானது மேக்ஸில் உள்ள குடலாஜராவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா,சீனா,ஜெர்மனி,ரஷ்யா,அமெரிக்கா,ஜப்பான்,ரொமானியா போன்ற பல நாடுகளின் சார்பில் பல வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஷாஜார் ரஜீவி தங்கம் பதக்கமும், ஜுது ராய் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.இதே போன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் கோஷ் மேஹுலி வெண்கல பதக்கம் வென்றார். மொத்தம் ஒரு தங்கம் ,இரண்டு வெண்கல பதக்கத்தை கைப்பற்றி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.இரண்டாம் இடத்தில் ஒரு தங்கம் வென்றுள்ள ரொமானியா உள்ளது. மூன்றாவது இடத்தில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ள சீனா உள்ளது. நான்காவது இடத்தில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ள ஜெர்மனி உள்ளது.

1.ஷாஜார் ரஜீவி

 

2.ஜுது ராய்

 

3.கோஷ் மேஹுலி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்