பதவியேற்ற ஒரு மாதத்தில் ராஜினாமா செய்த ஈராக் பிரதமர்..!

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 400 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதன் பிறகு கடந்த மாதம் அதிபர் பர்ஹாம் சாலி புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை நியமித்தார்.
இதையெடுத்து முகமது தவுபிக் அலாவியை பிரதமராக நியமித்ததற்கு எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்க நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால் போதுமான ஆதரவு கிடைக்காததால் முகமது தவுபிக் அலாவி பதவி விலகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025